< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 வீடுகளுக்கு தீவைப்பு
தேசிய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 வீடுகளுக்கு தீவைப்பு

தினத்தந்தி
|
23 May 2023 12:17 AM IST

மணிப்பூரில் மீண்டும் நேற்று வன்முறை ஏற்பட்டது. அதில் 2 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் இந்த மாத துவக்கத்தில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ராணுவம் தலையிட்டு, அமைதியை நிலைநாட்டியது.

இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய 2 விஷமிகள், கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை நேற்று வற்புறுத்தினர். அதையடுத்து அவர்களை ஒரு கும்பல் தாக்கியது. இருவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில், மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் அந்த கும்பல், 2 வீடுகளுக்கு தீவைத்தது.

இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். திரண்டிருந்த கும்பலை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். அப்போது சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் சாலையில் டயர்களை போட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பத்தை தொடர்ந்து, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்