மங்களூருவில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
|மங்களூருவில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்ட்டார். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட போர்கொடி பகுதியில் தொழில்அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தொழில்அதிபர், பஜ்பே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பஜ்பே போலீசார், தொழில்அதிபர் வீட்டில் திருடிய ஒருவரை கைது செய்தனர். அதாவது, கின்னிப்பதவு பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் தரிகம்பலாவை சேர்ந்த வின்சென்ட் டிசோசா (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கைதான வின்சென்ட் டிசோசாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.