< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாறு படைத்துள்ளது' - பிரதமர் மோடி
|18 Jun 2024 7:10 PM IST
மக்களவை தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாறு காணாத தீர்ப்பு, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் பட்டேல், மத்திய விவசாயத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "காசி விஸ்வநாதர் மற்றும் கங்கை தாயின் ஆசியுடனும், காசி மக்களின் அன்புடனும் நான் 3-வது முறை இந்த நாட்டின் பிரதான சேவகராக பதவியேற்றுள்ளேன். மக்களவை தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாறு காணாத தீர்ப்பு, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.