< Back
தேசிய செய்திகள்
வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - மனைவியை குத்தி கொன்ற கணவன்
தேசிய செய்திகள்

வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - மனைவியை குத்தி கொன்ற கணவன்

தினத்தந்தி
|
2 April 2023 3:58 AM IST

ஆந்திராவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூரில் நேற்று காலையில் பெண் ஒருவரை அவரது கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹேமலதா என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் பாபு என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சித்தூர் நகரின் வித்யாநகர் காலனியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஹேமலதா. பாபு, எஸ்ஆர் புரம் கண்ட்லப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பாபு தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து ஹேமலதா சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஹேமலதா சித்தூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக பாபுவுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனது மனைவியை கொன்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்