வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவியை கத்தியால் குத்தி கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்..!
|மத்தியப்பிரதேசத்தில் வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதற்காக மனைவியைக் கத்தியால் குத்திகொன்ற நபர், தானும் தற்கொலை செய்துகொண்டார்.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் விபோர் சாஹு என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மனைவி ரிது, 23.
இவர், வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதற்காக தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது விபோர் சாஹுவின் தாயும் சகோதரரும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது, தம்பதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டிரைவர் வேலைக்கு சென்றுவரும் விபோர் சாஹு, கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால், கவலையடைந்த அவரது மனைவி, வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துமாறு பலமுறை அவரிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த விபோர் சாஹு, தன் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறீய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.