< Back
தேசிய செய்திகள்
சத்தீஸ்கர்: தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர்: தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 6:23 AM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோர்பா,

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் ஊழியர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொன்றதாகக் போலீசார் தெரிவித்தனர்.

குஸ்முண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் அமன் தாஸ், வீட்டின் குளியலறையில் தனது தாய் லக்ஷ்மி, 44, மற்றும் தனது சகோதரி அஞ்சல், 21, ஆகியோரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளார்.

குளியலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும் அவரது மகளையும் அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார், தடயவியல் குழு மற்றும் நாய் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில், ​​அமன் தாஸ், தனது தாய் மற்றும் சகோதரியை சமையலறைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கத்தி ஒன்றை மீட்டதுடன், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்