< Back
தேசிய செய்திகள்
மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்
தேசிய செய்திகள்

மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

தினத்தந்தி
|
3 Feb 2024 5:48 AM IST

தனது கணவர் மது அருந்துவதால் பினிதா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் துவாரகா அடுத்த டப்ரி பகுதியில் நரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி பினிதா, நரேந்தருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், தனது கணவர் மது அருந்துவதால் பினிதா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம்போல நரேந்தர் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பினிதா, நரேந்தருடன் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த நரேந்தர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பினிதாவின் மீது ஊற்றி, அவர் மீது தீ வைத்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக பினிதாவின் உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நரேந்தரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்