< Back
தேசிய செய்திகள்
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
16 Sept 2023 3:27 AM IST

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கமகளூரு:

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் தொல்லை

தாவணகெரே மாவட்டம் நியாமதி பகுதியை சேர்ந்தவர் ரங்கா (வயது 25). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரங்கா கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவருக்கு ரங்கா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதற்கிடையே அந்த சிறுமி, ரங்காவிடம் இருந்து தப்பித்து தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி உடனடியாக நியாமதி போலீசில் புகார் அளித்தனர்.

5 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்காவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு தாவணகெரே கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி ஸ்ரீபத் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது ரங்கா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்