< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளத்தில் கொடூரம்: 5-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்த முதியவர் கைது
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கொடூரம்: 5-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்த முதியவர் கைது

தினத்தந்தி
|
7 Sept 2023 3:40 AM IST

மேற்கு வங்காளத்தில் சிறுமியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிலிகுரி,

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ளது பனிஷாலி பஞ்சாயத்து. இங்கு 5-ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமி பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு தனியாக இருந்து வந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர், சிறுமியிடம் பேசிப் பழகி வந்துள்ளார்.

ஒருமுறை சிறுமியிடம் ரூ.10 கொடுத்துவிட்டு, அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய முதியவர், மீண்டும் மீண்டும் ரூ.10 ரூபாய் கொடுத்து சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக இதுபோல் நடந்து வந்த நிலையில், சிறுமி தனது தாயாரிடம் அதுகுறித்து கூறி உள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்