< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே போதைப்பொருள் கடத்தல்காரர் மீது ராணுவம் துப்பாக்கி சூடு
|25 Sept 2023 3:33 AM IST
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே போதைப்பொருள் கடத்தல்காரர் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.
ஜம்மு,
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் அந்த நபர், எல்லை கட்டுப்பாட்டு கோடு நோக்கி ஓடத்தொடங்கினர். அவரை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.
அவர் பெயர் யாசர் நசீர் என்றும், உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார். கடத்துவதற்காக அவர் வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. யாசர் நசீர் கைது செய்யப்பட்டார். குண்டடிபட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.