ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை
|டெல்லியில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம் கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் மான்சிங். இவர் டெல்லியில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், மான்சிங் தனது வீட்டில் வெள்ளையடிக்கும் பணியிருப்பதாக கூறி வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்ற உடன் தனது அறையில் மது அருந்தி உள்ளார்.
அப்போது வீட்டிற்கு கீழ் வசிக்கும் அந்த பெண் துணியை காயவைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மான்சிங் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனை தனது கணவரிம் கூற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மான்சிங் அந்த பெண்ணை கையில் வைத்திருந்த கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் மயங்கி விழுந்தார்.அதன்பின் அவரது கழுத்தை அறுத்து கொடுரமான முறையில் கொலை செய்துள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மான்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.