< Back
தேசிய செய்திகள்
மனைவி, குழந்தையை கொன்று வாட்ஸ்அப் குரூப்பில் புகைப்படத்தை பகிர்ந்த நபர் கைது

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மனைவி, குழந்தையை கொன்று வாட்ஸ்அப் குரூப்பில் புகைப்படத்தை பகிர்ந்த நபர் கைது

தினத்தந்தி
|
25 Aug 2024 5:22 PM IST

அருணாச்சல பிரதேசத்தில் மனைவி மற்றும் குழந்தையை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இட்டாநகர்,

அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் லாங்டிங் மாவட்டத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கானு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கம் கங்சா (35 வயது). இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தையை கொன்றுள்ளார். பின்னர் அவர்களின் புகைப்படத்தை ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து அவர்களை தான் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒருவர் புகாரளித்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு வாள் மற்றும் மண்வெட்டியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்