< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நிலத் தகராறில் பெற்றோரை சுட்டுக் கொன்ற மகன்
|29 May 2023 12:29 AM IST
உத்தரப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பெற்றோரை மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரோசாபாத்,
உத்தரப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பெற்றோரை மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ராகேஷ் யாதவ் (வயது 55), குத்தி தேவி என்ற தம்பதியின் மூத்த மகன் பிது யாதவ். இவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் எட்டா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்த தம்பதி இருவரும் நிலத்தை வைத்திருப்பது தொடர்பாக பிதுவுடன் ஆலோசிக்க ஞாயிற்றுக்கிழமை பிரோசாபாத் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை தகராறாக மாறவே, ஆத்திரத்தில் பிது துப்பாக்கியால் பெற்றோரை சுட்டுக் கொன்றுள்ளார். பண்ணையில் இருந்து அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.