< Back
தேசிய செய்திகள்
லிவ்-இன் காதலியுடன் சண்டை - கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
தேசிய செய்திகள்

லிவ்-இன் காதலியுடன் சண்டை - கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

தினத்தந்தி
|
25 Jun 2023 1:24 AM IST

குஜராத்தில் நபர் ஒருவர் லிவ்-இன் காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவ்சாரி,

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தின் பிலிமோரா அருகே 26 வயது நபர் ஒருவர் தனது மைனர் லிவ்-இன் காதலியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த அந்த நபர் ஏறக்குறைய ஒரு வருடமாக அந்த சிறுமியுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். அந்த பெண் மேஜரான பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அந்த நபர் போதையில் தன்னை அடிப்பதாக அவர்கள் இருவரும் வசித்து வந்த குடியிருப்பில் இருந்த அந்த நபரின் உறவினரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, குடிபோதையில் வீடு திரும்பிய அந்த நபருக்கும் சிறுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்த நபர் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்