< Back
தேசிய செய்திகள்
சக ஊழியரை மூங்கில் கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு உடலை செப்டிங் டேங்கில் வீசிய நபர் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

சக ஊழியரை மூங்கில் கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு உடலை செப்டிங் டேங்கில் வீசிய நபர் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
7 Aug 2023 10:42 PM IST

மும்பையில் நபர் ஒருவர், சக ஊழியரை மூங்கில் கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு உடலை செப்டிங் டேங்கில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் சக ஊழியரை மூங்கில் கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு உடலை செப்டிங் டேங்கில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஓஷிவாராவின் எஸ்வி ரோடு பகுதியில் உள்ள கட்டுமான தளத்தின் செப்டிக் டேங்கில் இருந்து ஒரு உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேரா சர்கா ராய் என்பவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், கேரா சர்கா ராயும், உயிரிழந்த சர்கா புஜரும் கட்டுமான தளத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் வேலை இழந்தனர். இதையடுத்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில், கேரா மூங்கில் கட்டையால் சர்காவை பலமுறை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை செப்டிக் டேங்கில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்