< Back
தேசிய செய்திகள்
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு
தேசிய செய்திகள்

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Sept 2022 4:00 PM IST

சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும் குப்பைகளும் பிரச்சனையாக உள்ளன. இந்தச் சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும். சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் வரும் 28ம் தேதி முக்கியமான நாளாகும்.

அன்று பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்