< Back
தேசிய செய்திகள்
மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி வீடியோ
தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
28 Jan 2024 3:45 PM IST

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஐஎன்ஏ மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் மெட்ரோ ரெயிலுக்காக காத்திருந்தனர்.

சமைபூர் பெட்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் வந்துகொண்டிருந்தபோது ரெயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன் பாய்ந்தார். இந்த சம்பவத்தில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபர் அஜிதேஷ் சிங் (வயது 30) என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்