< Back
தேசிய செய்திகள்
முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்று, உண்மையான முதலையை சீண்டிய நபர்:  வைரலான வீடியோ

Image Courtesy:  Indiatoday

தேசிய செய்திகள்

முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்று, உண்மையான முதலையை சீண்டிய நபர்: வைரலான வீடியோ

தினத்தந்தி
|
11 Dec 2022 1:33 PM IST

முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்ற நபர், உண்மையான முதலையின் காலை பிடித்து, இழுத்த வீடியோ வைரலாகி வருகிறது.



புதுடெல்லி,


முதலைகள் நீரில் வசிக்கும் தன்மை கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. மனிதர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிக்காது என்றபோதிலும், ஒரு சில முதலை வகைகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

இந்நிலையில், முதலை போன்று உடையணிந்த நபர் ஒருவர், உண்மையான முதலை ஒன்றின் அருகே ஊர்ந்து சென்றுள்ளார். அந்த முதலை கரையோரம் படுத்திருந்தது. இந்த நபர், மெல்ல முதலையின் அருகே சென்று அதன் வலது பின்னங்காலை பிடித்து இழுத்துள்ளார்.

அந்த முதலை அசதியில் இருந்ததோ அல்லது கருப்பு நிறத்தில் மற்றொரு முதலை இருக்கிறது என நினைத்ததோ தெரியவில்லை. மெல்ல தனது காலை அந்நபரின் பிடியில் இருந்து விடுவித்து தன் பக்கம் இழுத்து கொண்டது.

ஆனாலும் இந்த நபர், வாலை தடவி கொடுத்து, மீண்டும் காலை பிடித்து இழுத்துள்ளார். அதுவரை முதலை அமைதியாகவே இருந்துள்ளது. 10 வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக முதலைகள் கரையோரத்தில் ஓய்வாக இருக்கும்போது, அமைதியுடன் காணப்படும். எனினும், சில சமயங்களில் அதனை சீண்டும்போது தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் ஆபத்தும் உள்ளது. அது தெரிந்தும் துணிச்சலுடன் இந்த நபர் முதலையை நெருங்கியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்