< Back
தேசிய செய்திகள்
திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீர் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சி வீடியோ
தேசிய செய்திகள்

திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீர் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
11 May 2023 12:27 PM IST

திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

சத்தீஸ்கர்,

நடனமாடும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வதை அதிகம் பார்க்கமுடிகிறது.

அதேபோன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கரின் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மேடையில் ஓரத்தில் உட்காருகிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார்.

இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த நபர் மேடையில் ஆடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

உடலுக்கு அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும்போது, இதயம் மிக வேகமாக செயல்படத் தொடங்கியது. அத்தகைய சூழ்நிலையில், தமனிகளில் சேரும் கொழுப்பு இதயத்திற்கு இரத்த விநியோகத்தைத் தடுக்கிறது.

மக்கள் வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று நர்சிங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தரேஷ் ராவ்தே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்