< Back
தேசிய செய்திகள்
பெண்கள் விடுதி: படுக்கைக்கு அடியில் பதுங்கி பாலியல் தொல்லை - வாலிபர் கைது
தேசிய செய்திகள்

பெண்கள் விடுதி: படுக்கைக்கு அடியில் பதுங்கி பாலியல் தொல்லை - வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 Jan 2024 9:54 PM IST

பெண்கள் உறங்கியதும் எழுந்து வந்த வாலிபர், ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலத்தில் உள்ள வார்க்கலா பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள அறையில் நான்கு பெண்கள் தங்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று படுக்கைக்கு அடியில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்துள்ளார்.

பெண்கள் உறங்கியதும் எழுந்து வந்த வாலிபர், ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்த அந்த பெண் அதிர்ந்துபோன நிலையில், அவரது அலறல் சத்தத்தை கேட்டு பதறிப்போன பிற தோழிகள் எழுந்து சரமாரி அடித்து துவைத்து இளைஞரை சிறைபிடித்து வைத்தனர்.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மகளிர் விடுதியில் வாலிபர் ஒருவர் பிடிப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்