< Back
தேசிய செய்திகள்
மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் பெண்ணின் மார்பகம் உள்பட உடல் உறுப்புகள் வெட்டிக் கொலை
தேசிய செய்திகள்

மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் பெண்ணின் மார்பகம் உள்பட உடல் உறுப்புகள் வெட்டிக் கொலை

தினத்தந்தி
|
5 Dec 2022 2:53 PM IST

பீகாரைச் சேர்ந்த நீலம் தேவி என்ற பெண் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கரைப் போலவே கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பாட்னா

பீகார் மாநிலம் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்தவர் அசோக் யாதவ் அவரது மனைவி நீலம் தேவி (40) இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன்வாங்கி இருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பும் பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நீலம் தேவி தனது மகனுடன் பக்கத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது அங்கு ஷகீல் தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்து உள்ளார்.

அங்கு ஏற்பட்ட தகராறில் ஷகீல் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து கூட்டம் நிறைந்த சந்தையில் அனைவர் முன்னிலையிலும் இளம்பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளணர். அந்த பெண்ணின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டினார்.குற்றவாளிகள் அவரது காலையும் வெட்ட முயன்றனர், ஆனால் கூட்டம் கூடவும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அந்த பெண் பலத்த காயங்களுடன் மாயாகஞ்சில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிக ரத்தப்போக்கு தான் மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண் இறப்பதற்கு முன் கொலையாளியின் பெயரை போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்