மனைவிக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டி காணிக்கையாக நாக்கை அறுத்துக்கொடுத்த வாலிபர்
|நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபரின் மனைவி வாய் பேச முடியாதவர் என்று கூறப்படுகிறது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (வயது 33). இவர் இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு சென்றார். குளத்தின் கரையில் நின்று மந்திரங்களை உச்சரித்த நிஷாத், திடீரென கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்தார். பின்னர் அதை கரையில் உள்ள கல்லில் வைத்தார்.
அதை தொடர்ந்து, நிஷாத் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்றார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிராமத்தினர், நிஷாத்தின் மனைவி வாய் பேச முடியாதவர் என்றும், அவருக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டி நிஷாத் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.