< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
|23 Aug 2023 12:57 AM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
குருகிராம்,
அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் பெண் ஒருவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ராகுல் என்ற நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ராகுல் அப்பெண்ணை ஹோட்டல் ஒன்றுக்கு வற்புறுத்தி அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்த ராகுல், தற்போது அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த அப்பெண், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வந்த ராகுலை தேடி வருகின்றனர்.