< Back
தேசிய செய்திகள்
மோசடி வழக்கில் தலைமறைவான நபர் 28 ஆண்டுகளுக்குப்பின் கைது
தேசிய செய்திகள்

மோசடி வழக்கில் தலைமறைவான நபர் 28 ஆண்டுகளுக்குப்பின் கைது

தினத்தந்தி
|
21 July 2024 11:05 AM IST

மோசடி வழக்கில் தலைமறைவான நபர் 28 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் நூ மாவட்டம் மலகா கிராமத்தை சேர்ந்தவர் குல்சீர். இவர் மீது ராஜஸ்தான் மாநிலம் தபுரகா போலீஸ் நிலையத்தில் 1996ம் ஆண்டு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் குல்சீரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் தலைமறைவானார். இதையடுத்து குல்சீரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.

இந்நிலையில், மோசடி வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குல்சீரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மலகா கிராமத்தில் பதுங்கி இருந்த குல்சீரை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்க அரியானா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்