< Back
தேசிய செய்திகள்
நிலத்தகராறில் இளைஞர் அடித்துக் கொலை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நிலத்தகராறில் இளைஞர் அடித்துக் கொலை

தினத்தந்தி
|
15 Jun 2024 7:02 AM IST

நிலத்தகராறில் 28 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாராயண்பேட்டை,

தெலுங்கானா மாநிலத்தில் நிலத்தகராறில் 28 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயண்பேட்டை மாவட்டம் சின்னபோர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சு (28 வயது). இவரது தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளின் வாரிசுகளுக்கும் இடையே நில உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நில உரிமை தொடர்பாக அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வாக்ககுவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த சஞ்சுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த மோதலில் மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்