< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர் கைது..!
|28 May 2022 2:55 PM IST
கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா:
கேரளாவில் உள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அதில் திருச்சூரை சேர்ந்த சுல்பிகர் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட நுண்ணறிவு புலனாய்வு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவர் கொண்டு வந்த பையில் உலர் பழங்களுக்கு இடையே தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவரின் பையில் இருந்து ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை மீட்டனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வரி ஏய்ப்பு செய்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த வருவாய்த்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.