< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
துணிகளில் ரகசிய அறைகள்... ஷார்ஜாவிலிருந்து 1.5 கிலோ தங்கக் கலவை கடத்திவந்த நபர் கைது
|21 Aug 2022 8:11 PM IST
ஷார்ஜாவில் இருந்து கேரளா வந்தடைந்த நபரை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோழிக்கோடு,
வெளிநாடுகளில் இருந்து, கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஷார்ஜாவில் இருந்து கரிப்பூரை வந்தடைந்த நபரை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவர் அணிந்திருந்த டி-சர்ட், பேண்ட் மற்றும் உள்ளாடைகளை சோதனை செய்தததில், அவற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்கக் கலவை மீட்கப்பட்டது. துணிகளில் ரகசிய அறைகள் செய்து தங்கக் கலவையை மறைத்துக் கடத்தியது சோதனையில் தெரியவந்தது.
இதேபோல் விமான நிலையத்திற்கு வெளியே தங்கம் கடத்த முயன்ற நபரையும் போலீசார் கைத் செய்தனர். கண்ணூரை சேர்ந்த இசுதீன் என்பவர் கால் சட்டையில் தங்கம் கலந்து கடத்த முயன்று போலீசாரிடம் சிக்கினார்.