< Back
தேசிய செய்திகள்
மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபர் கைது.!
தேசிய செய்திகள்

மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபர் கைது.!

தினத்தந்தி
|
13 Nov 2023 3:45 AM IST

தான் வைத்த பெட்ரோலைக் கொண்டு கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி உடனடியாக தீ வைத்தார்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுர்வாடா காவல் நிலையப் பகுதியில் மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபரை கைது செய்துள்ளதாக விசாகப்பட்டினம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுர்வாடா பகுதியில் உள்ள ஒயின் ஷாப்பில் நபர் ஒருவர், மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் அப்போது கடையை அடைக்கும் நேரம் என்பதால் கடை ஊழியர்கள் அவருக்கு மது கொடுக்க மறுத்தனர்.

இதனால், அந்த நபருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்திற்கு பிறகு அந்த நபர், அங்கிருந்து வெளியேறினார், ஆனால் அவர் நேற்று மாலை, ஒரு பெட்ரோல் கேனுடன் மதுபானக்கடைக்கு மீண்டும் வந்தார்.

அப்போது, தான் வைத்திருந்த பெட்ரோலை கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி உடனடியாக தீ வைத்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடையை விட்டு ஓடினர். ஆனால் கடை எரிந்து சேதமடைந்தது. ஒரு கணினி மற்றும் பிரிண்டர் உட்பட ரூ. 1.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்றார்.

மேலும் செய்திகள்