< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தின் ஆதார் அட்டைகளில் மாற்றம் செய்து பயன்படுத்திய நபர் கைது
|27 July 2023 4:59 AM IST
ஐ.பி. முகவரி அடிப்படையில் மதன்குமாரை குஜராத் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
முசாபர்பூர்,
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கரிபா கவோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்பனா துபே என்ற மதன்குமார். இவர், இணையதளத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆதார் அட்டைகளில் பிறந்த தேதிகள் உள்ளிட்ட விவரங்களை முறைகேடாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த அட்டைகளை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.பி. முகவரி அடிப்படையில், மதன்குமாரை குஜராத் போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்ற குஜராத் போலீசார், உள்ளூர் போலீஸ் உதவியுடன் சதாத்பூர் என்ற இடத்தில் மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர்.