< Back
தேசிய செய்திகள்
பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தையால் பேசிய நபர் கைது
தேசிய செய்திகள்

பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தையால் பேசிய நபர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2022 12:03 AM IST

மராட்டியத்தில் பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தையால் பேசிய நபர் கைதுசெய்யப்பட்டார்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே நகரின் தலாபாலி பகுதியில் 16 வயது பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தைகளை கொண்டு பேசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, சனிக்கிழமை காலை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த நபர் சிறுமியிடம் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறல் சத்தம் போட்டார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காவலரால் போக்சோ சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்