< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுகிறார்.. மம்தா மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாய்ச்சல்
தேசிய செய்திகள்

பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுகிறார்.. மம்தா மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாய்ச்சல்

தினத்தந்தி
|
24 Jan 2024 4:36 PM IST

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய கட்சிகள், தனித்து போட்டியிட முடிவு எடுத்திருப்பது கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஐதராபாத்:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பிராந்திய கள நிலவரங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த களப்பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்திருக்கிறார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய கட்சிகள், தனித்து போட்டியிட முடிவு எடுத்திருப்பது கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான தீபா தாஸ் முன்ஷி கூறுகையில், "மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு உதவுகிறார் என்றே நான் நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் அவருக்கு மறைமுகமான தொடர்பு இருப்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவரது இந்த முடிவு அதை நிரூபித்துள்ளது. இதுநாள் வரை இந்தியா கூட்டணியில் இருந்த அவர், இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். எனவே, அவர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து இருக்கிறார் என்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதையும் இது நிரூபித்துள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்