< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை
|30 Jun 2023 2:05 AM IST
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.