மம்தா பானர்ஜிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை
|மம்தா பானர்ஜிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டரில் திரும்பி கொண்டிருந்தபோது, மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் சிக்கியது. இதையடுத்து, சிலிகுரி அருகே உள்ள செவோக் விமானதளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜிக்கு இடுப்பு, இடது முழங்கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. இதற்காக வீட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்த மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்குப்பின் மம்தா பானர்ஜி நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அவர் வீடு திரும்பினாரா அல்லது ஆஸ்பத்திரிலேயே தங்கியுள்ளாரா என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னதாக மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி ஆஸ்பத்திரிக்கு சென்று மம்தா பானர்ஜியை பார்த்தார்.