< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு 'பிரணாப் முகர்ஜி' பெயர் - மம்தா பானர்ஜி கோரிக்கை
|26 Sept 2022 3:47 AM IST
கொல்கத்தாவில் சாலை மற்றும் பூங்காவுக்கு பிரணாப் முகர்ஜியின் பெயரை சூட்டுமாறு மேயருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
கொல்கத்தா,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது நினைவை போற்றும் வகையில் தலைநகர் கொல்கத்தாவில் அவரது பெயரில் சாலை மற்றும் பூங்காவை ஏற்படுத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று துர்கா பூஜை பந்தல்களை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக கூறுகையில், 'கொல்கத்தாவில் ஒரு சாலைக்கு அது சிறிய சாலையாக இருந்தால் கூட, பிரணாப் முகர்ஜி பெயரை சூட்டுமாறு பிர்காத் ஹக்கிமை (மேயர்) கேட்டுக்கொள்கிறேன். அதைப்போல சிறிய பூங்கா ஒன்றுக்கும் அவரது பெயரை சூட்டுமாறு வேண்டுகிறேன்' என தெரிவித்தார். இதைப்போல மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர்கள் பெயரிலும் சாலைகளை திறக்குமாறும் அவர் மேயரிடம் அறிவுறுத்தினார்.