< Back
தேசிய செய்திகள்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
24 Jan 2024 2:07 AM IST

மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் 10 முதல் 12 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் காங்கிரசுக்கு 2 தொகுதிகளை மட்டுமே வழங்க திரிணாமுல் காங்கிரஸ் தயாராக உள்ளது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பிர்பும் தொகுதியில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் காங்கிரஸ் நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். அதே சமயம் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பற்றி யோசிக்கத் தேவையில்லை என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்