< Back
தேசிய செய்திகள்
மல்லிகார்ஜூன் கார்கே பினாமி தலைவராகவே இருப்பார்:  பாஜக விமர்சனம்
தேசிய செய்திகள்

மல்லிகார்ஜூன் கார்கே பினாமி தலைவராகவே இருப்பார்: பாஜக விமர்சனம்

தினத்தந்தி
|
1 Oct 2022 7:28 AM GMT

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன் கார்கே பினாமி தலைவராகவே இருப்பார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன் கார்கே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மல்லிகார்ஜூன் கார்கேவே வெற்றி வாய்ப்பு உள்ள தலைவராக இருப்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், மல்லிகார்ஜூன் கார்கே, காந்தி குடும்பத்தினரின் பினாமியாகவே இருப்பார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாவத் பூனாவாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 'நேரு-காந்தி குடும்பத்தினர் ஆதரவை அசோக் கெலாட் இழந்ததைத் தொடா்ந்து, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் பினாமி வேட்பாளராக 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே தோ்வாகியுள்ளார். இதனை நியாயமான, சுதந்திரமான நடைமுறை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டாார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்