< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் மல்லிகார்ஜுன் கார்கே!
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் மல்லிகார்ஜுன் கார்கே!

தினத்தந்தி
|
1 Oct 2022 11:50 AM IST

“ஒரு தலைவர், ஒரு பதவி” என்ற தீர்மானத்தின்படி, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர் மற்றும் கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் மல்லிகார்ஜுன் கார்கே தலைவர் பதவிக்கு களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், உதய்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட "ஒரு தலைவர், ஒரு பதவி" என்ற தீர்மானத்தின்படி, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

கார்கே பதவி விலகியதை தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப சிதம்பரமும், திக்விஜய சிங்கும் போட்டியில் உள்ளனர்.

ஜி-23 தலைவர்கள் பிரிதிவிராஜ் சவான், மணீஷ் திவாரி மற்றும் பூபிந்தர் ஹூடா ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜுன் கார்கேவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்