< Back
தேசிய செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே 6-ந் தேதி பெங்களூரு வருகை
தேசிய செய்திகள்

மல்லிகார்ஜுன கார்கே 6-ந் தேதி பெங்களூரு வருகை

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுள்ள மலலிகார்ஜுன கார்கே வருகிற 6-ந் தேதி பெங்களூருவுக்கு வர உள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்தே உற்சாக வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுள்ள மலலிகார்ஜுன கார்கே வருகிற 6-ந் தேதி பெங்களூருவுக்கு வர உள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்தே உற்சாக வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

6-ந் தேதி பெங்களூரு வருகை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். டெல்லியில் நடந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் அவர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், வருகிற 6-ந் தேதி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.

தேசிய தலைவராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவுக்கு வர இருப்பதால், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். வருகிற 6-ந் தேதி காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகிறார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வரவேற்பு

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் வரை அவரை ஊர்வலமாக அழைத்து வர முடிவு செய்து உள்ளனர். அன்றைய தினம் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மூத்த தலைவர்களுடன், மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, மதியம் 2 மணிக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த பாராட்டு விழாவில் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்