< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காட்டு யானை தாக்கி கேமராமேன் பலி
|8 May 2024 1:23 PM IST
காட்டு யானை தாக்கிய சம்பவத்தில் பிரபல செய்தி சேனலின் கேமராமேன் உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல செய்தி சேனலில் முகேஷ் (வயது 34) கேமராமேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பாலக்காடு மாவட்டம் கோட்டிகட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகளை புகைப்படம் எடுக்க சென்றிருந்தார். அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே யானைகள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அதை முகேஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த காட்டு யானை முகேஷை சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் முகேஷ் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவரை மீட்ட சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.