< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"தினமும் யோகா பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்" - பிரதமர் மோடி
|12 Jun 2022 5:48 PM IST
யோகா பயிற்சி செய்வதை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளுமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, நாடு முழுவதும் யோகா பயிற்சி குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் யோகாவின் முக்கியத்துவம் குறித்த காணொலி காட்சியை பகிர்ந்து, ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"இன்னும் சில நாட்களில், சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாட உள்ளது. நீங்கள் அனைவரும் யோகா தினத்தை அனுசரித்து, தினமும் யோகா பயிற்சி செய்வதை உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.