வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்: பிரதமர் மோடி
|சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த தன்னுடைய புகைப்படத்தை நீக்கிவிட்டு தேசியக்கொடியை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டு சுதந்திர தினம் வருவதால் மீண்டும் அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மறக்க முடியாத நாளாகவும், மக்களுக்கான இயக்கமாகவும் மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். அதேயே அனைவரும் செய்து நமது மூவர்ணக் கோடியை கொண்டாடுவதில் என்னுடன் சேருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அந்த மூவர்ணக் கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை https://harghartiranga.com என்ற வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.