< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு
|18 April 2024 5:27 AM IST
மென்தார் அருகே குகைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
ஜம்மு,
காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார்- ராணுவ படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மென்தார் அருகே தேர்தல் முன்னேற்பாடுகளை குலைக்க பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் துணை ராணுவத்தினருடன் இணைந்து சிறப்புப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள குகைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ, 10 கிலோ மற்றும் 20 கிலோ எடை கொண்ட 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.