< Back
தேசிய செய்திகள்
ஒரே வாரத்தில் 4 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு;  மந்திரி சுனில்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

ஒரே வாரத்தில் 4 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு; மந்திரி சுனில்குமார் பேட்டி

தினத்தந்தி
|
26 July 2022 11:14 PM IST

ஒரே வாரத்தில் 4 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இதில் பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. கடந்த ஓராண்டில் மின்சாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். விளக்கு திட்டத்தின் கீழ் தொடர்பு வசதி இல்லாத கிராமங்களுக்கும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 75 யூனிட் வரைக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 4 லட்சம் டிரான்ஸ்பார்மர்களை பராமரித்துள்ளோம். கர்நாடக மின்சார கழகம் சார்பில் ஓராண்டில் 1,850 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 37 இடங்களில் துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார்.

மேலும் செய்திகள்