< Back
தேசிய செய்திகள்
கணவருக்கு இப்படி ஒரு குறையா? திருமணமான ஒரே ஆண்டில் அதிர்ந்த மனைவி
தேசிய செய்திகள்

கணவருக்கு இப்படி ஒரு குறையா? திருமணமான ஒரே ஆண்டில் அதிர்ந்த மனைவி

தினத்தந்தி
|
30 Jan 2024 12:59 PM IST

ஆண்மை குறைவை மறைத்து பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், 40 வயதான எனது கணவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 8-ந்தேதி நாசிக்கில் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு, எனது கணவர் ஆண்மை குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஆவணங்கள் எனக்கு அவரது வீட்டில் இருந்து கிடைத்தன. இதனை கண்டு அவர் அதிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது அவர் முறையாக பதில் கூறவில்லை. இந்தநிலையில் சமீபத்தில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது, அவர் ஆண்மை குறைவுக்கு சிகிச்சை பெற்றதையும், அதை மறைத்து திருமணம் செய்து கொண்டதையும் ஒப்புக்கொண்டார். மேலும் என்னை அவர் சித்ரவதை செய்து வந்தார். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்து திருமணம் செய்துகொண்ட என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்