< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்: மும்பை, புனே உள்பட முக்கிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தேசிய செய்திகள்

மராட்டியம்: மும்பை, புனே உள்பட முக்கிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தினத்தந்தி
|
8 July 2024 10:07 PM IST

மராட்டியத்தின் மும்பை நகரில் விமான நிலையத்தில் கனமழையால் நீர் தேங்கி விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டது.

புனே,

மராட்டியத்தின் மும்பை, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று, புனே மற்றும் சதாரா நகரங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

வருகிற 12-ந்தேதி வரை மும்பையின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை வரை (9-ந்தேதி ) மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

மும்பையில் இன்று காலை கனமழை பதிவான சூழலில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் திருப்பி விடப்பட்டன. மும்பையில் விமான நிலையத்திலும் மழையால் நீர் தேங்கி விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டது. கனமழையால், பள்ளிகள் இன்று மூடப்பட்டதுடன், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்