< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடனை சரமாரியாக தாக்கிய 5 பேர் கைது!
|5 Dec 2022 10:28 AM IST
திருடனை மக்கள் அடிக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கரில் உள்ள பெல்ஹார் பகுதியில் கடந்த 1ம் தேதி ஒரு வீட்டுக்குள் திருட வந்த ஒரு திருடனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். அதன்பின் அவர்கள் அந்த திருடனை அடித்து தாக்கினர்.
இந்த நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் அந்த திருடன் பலத்த காயமடைந்தான். திருடனை மக்கள் அடிக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து பெல்ஹார் போலீசார், பாதிக்கப்பட்ட திருடன் மற்றும் அவனை கொடூரமாக அடித்து தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட திருடன் மீது திருட்டு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருடனை கொடூரமாக தாக்கியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.