< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியம்: சட்டவிரோத பார், மதுபான கூடங்களை புல்டோசர் கொண்டு இடித்து தள்ள உத்தரவு
|27 Jun 2024 9:38 AM IST
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, போதை பொருள் பயன்பாடானது இளைஞர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருவதுடன், பெரும் தீமையை உண்டாக்குகிறது என்று கூறியுள்ளார்.
புனே,
மராட்டியத்தின் தானே மற்றும் மீரா-பயந்தர் நகரங்களை போதை பொருட்கள் இல்லாத நகரங்களாக உருவாக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதனை முன்னிட்டு முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், சட்டவிரோத வகையிலான பார்கள், மதுபான கூடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் காவல் துறை ஆணையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, போதை பொருட்களுடன் தொடர்புடைய சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை பயன்படுத்தி அழிக்கவும் அவர் ஆலோசனை கூறினார். போதை பொருள் பயன்பாடானது, இளைஞர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பெரும் தீமையை உடனடியாக நிறுத்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.