< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்: செவிலியா்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தேசிய செய்திகள்

மராட்டியம்: செவிலியா்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தினத்தந்தி
|
27 May 2022 11:30 PM IST

மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திாிகளில் பணியாற்றும் செவிலியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

மும்பை,

மராட்டிய மாநில செவிலியர்கள் தங்களை தனியார் மூலமாக பணியமர்த்துவதற்கு எதிா்ப்பு தொிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.முன்னதாக 27-28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனா். இந்த நிலையில், மே 28 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து மராட்டிய மாநில செவிலியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுமித்ரா டோட் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே நாங்கள் வருகிற மே 28 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளளோம் என அவா் தொிவித்தாா்.

இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 1,500 மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமாா் 15 ஆயிரத்திற்கும் அதிகமான செவிலியா்கள பங்கேற்பாா்கள் என அவா் தொிவித்தாா். மேலும் மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊக்கதொகையாக ரூ 7,500 வழங்கப்படுகிறது. அதேபோல எங்களுக்கும் இது போன்ற சலுகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்