< Back
தேசிய செய்திகள்
தங்கையை சித்திரவதை செய்து கொலை செய்த சகோதரன் - மராட்டியத்தில் அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தங்கையை சித்திரவதை செய்து கொலை செய்த சகோதரன் - மராட்டியத்தில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
8 May 2023 8:31 PM IST

மராட்டியத்தில் 12 வயது சிறுமியை சித்திரவதை செய்து சகோதரனே கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு 12 வயது தங்கையை சகோதரன் சித்திரவதை செய்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சிறுமியின் தாய் இறந்து விட்ட நிலையில், அவரது சகோதரர் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சகோதரன் சந்தேகித்து சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.

சிறுமியின் உடலில் கம்பியால் சூடு வைத்து அவரது சகோதரன் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து சித்திரவதை செய்த நிலையில், பலத்த காயமடைந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்