< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மது அருந்த பணம் தர மறுத்ததால் தாயை கொன்ற கொடூர மகன்
|30 Jan 2023 12:39 AM IST
மராட்டியத்தில் மது அருந்த பணம் தர மறுத்ததால் தாயை, மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர்,
மராட்டிய மாநிலத்தில் மது அருந்த பணம் தர மறுத்ததால், 60 வயது பெண் ஒருவரை அவரது மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக நாக்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வந்தேவி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 28 வயதாகும் இளைஞர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சில சின்ன சின்ன வேலைகளை செய்து வந்த அவர், மது வாங்குவதற்கு தனது தாயை துன்புறுத்தி பணம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தாயிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்த நிலையில் அவரை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு போலீசில் சரண்டைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.